பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகளும், நடிகையுமான கடந்த ஆண்டு, ரஜினிகாந்த் -  த்ரிஷா,  நடித்து திரைக்கு வந்த 'பேட்ட' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழ் மட்டும் இன்றி, இந்தி, மலையாளம், கன்னட, ஆகிய மொழி படங்களிலும் நடித்துவருகிறார். தற்போது தெலுங்கில் விஜய்தேவர கொண்டாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு, பல மொழிகளில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.  இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.  பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய, 'பிஹைண்ட் தி க்ளவுட்ஸ்' பாலிவுட் படத்தின் மூலம் இந்திக்கு சென்ற இவருக்கு, முதல் படமே நல்ல நடிகை என்கிற பெயரை எடுத்து கொடுத்தது.

இந்நிலையில் மாளவிகா மோகனுக்கும், பிரபல இந்தி நடிகர் விக்கி கவுசலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இந்தி பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது.  விக்கியுடன் ஏற்கனவே சில இந்தி படங்களில் இவர் இணைந்து நடித்த போது, இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. 

இன்னும் இந்த தகவல் உறுதிசெய்யப்படம் உள்ள நிலையில், சமீபத்தில் விக்கியும் அவரது சகோதரர் சன்னியும்,  மாளவிகா வீட்டுக்கு சென்று, மாளவிகாவின் தாயாரைச் சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.  இதன் மூலம் மாளவிகாவுக்குவிற்கும் விக்கி கவுசலுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என பேச்சு கிளம்பியுள்ளது.