தமிழ் சினிமாவில், பல இளம் நடிகர்கள் வளர்ந்து வந்தாலும், அசைக்க முடியாத இடத்தை பிடித்த நடிகர்களாக இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன். இவர்களின் படங்களில் நடித்து விட வேண்டும் என்பதே தற்போதைய இளம் நடிகைகள் பலரின் கனவு. இதனை சில நடிகைகள் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பல மாதங்கள் கழித்து மீண்டும் ரஜினியும் கமலும் ஒரே மேடையில் சந்தித்து கொள்ள போகின்றனர். அந்த தகவலை நடிகர் சங்க செயலாளர் விஷால் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றும் கமலஹாசன் இருவரும், முரசொலி பவழ விழா, மற்றும் ஒருசில பொது நிகழ்ச்சிகளில் சந்தித்த நிலையில், தற்போது இவர்கள் இருவரையும் மீண்டும் சந்திக்க வைத்துள்ளது 'இளையராஜா 75 ".  வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள 'இளையராஜா 75' இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக விஷால் உறுதி செய்துள்ளார்.