நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு அஸ்வின் என்பவருடன் ஏற்கனவே திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

சவுந்தர்யாவின் முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்தையடுத்து, தற்போது தொழிலதிபர் விசாகனை இரண்டாவது திருமணம் செய்கிறார். இவரும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர்.

இவர்களது திருமணம் வருகிற 11ல், சென்னையில் நடக்கிறது. , 12ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும்  நடைபெற இருக்கிறது. கோயம்பத்தூர் மாப்பிள்ளையான  விசாகன், இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான அபேக்ஸ் லேபராட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.  

சவுந்தர்யா விசாகன் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. தமிழகத்தின் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என முக்கிய  பிரபலங்களை சந்தித்து, அழைப்பிதழ் கொடுத்து வரும் வேளையில் பிசியாக இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். 

இதற்காக தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று பத்திரிக்கை கொடுத்து வருகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அவர் பத்திரிக்கை கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில்  சந்தித்துப் பேசினார். நேற்று மாலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசனை  சந்தித்த ரஜினிகாந்த் மகளின் திருமணப் பத்திரிக்கையை நேரில் கொடுத்தார்.