வரும் 10 தேதியன்று மும்பையில் துவங்கவிருக்கும் இன்னும் பெயரிடப்படாத ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் படம் தொடர்பான அத்தனை செய்திகளும் வைரலாகிக்கொண்டிருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் படத்தில் உலகநாயகன் மகள் நடிக்கவிருக்கும் ஒரு செய்தியும் ரவுண்ட்ஸ் கிளம்பியிருக்கிறது.

அது கமலின் மூத்த மகள் ஸ்ருதியா இளைய மகள் அக்‌ஷராவா என்று கன்ஃபியூஸ் ஆகிக்கொள்ளவேண்டாம், இந்த மகள் ‘பாபநாசம்’ படத்தில் கமல் - கவுதமி ஜோடிக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ்.

துவக்கத்தில் இந்தப் பாத்திரத்துக்கு சில இளம் ஹீரோயின்களின் பெயரை முருகதாஸ் சிபாரிசு செய்தபோது பதில் எதுவும் சொல்லாமல் இருந்த ரஜினி, நிவேதா தாமஸ் ஓ.கே.வா என்று முருகதாஸ் கேட்டபோது, கமலோட ‘பாபநாசம்’ படத்து மகள்தான, ரொம்ப சிறப்பான செலக்‌ஷன் என்றாராம்.

நாளை மறுதினம் மும்பைக்குக் கிளம்பும் படக்குழுவினர் ஒரு மாதம் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர். இடையில், வருகிற 18-ந் தேதி மட்டும் சென்னை வந்து ஓட்டு போட்டு விட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். ரஜினியின் கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களில் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.