பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சி ஒன்றுக்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாட்டில் இருந்து ஸ்டண்ட் இயக்குனர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் இவர்கள் ரஜினியுடன் சண்டை போடும் காட்சி விரைவில் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்கும் எமிஜாக்சன் தனது கேரக்டர் குறித்த புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். 

எந்திரன்' படத்தின் ஐஸ்வர்யா ராய் கேரக்டருக்கும் '2.0' படத்தின் தனது கேரக்டருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், இந்த படத்தில் தன்னுடைய காட்சிகள் அதிகளவு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.