கடவுளே தர்பாரை காப்பாத்து! படம் வெற்றிபெற அலகு குத்தி... மண் சோறு... சாப்பிட்ட ரசிகர்கள்!

'தர்பார்' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள், படத்தை ஆரவாரத்தோடு வரவேற்க தயாராகி வருகிறார்கள். மேலும் படம் வெற்றி பெற, மதுரையை சேர்ந்த ரசிகர்கள் அலகு குத்தி, மண் சோறு சாப்பிடும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.
 
rajini fans following devotional methods for darbar success

மதுரை மாவட்டம்,  திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக, 'தர்பார்' திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என அலகு குத்தியும், மண் சோறு சாப்பிடும் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

rajini fans following devotional methods for darbar success

இந்த பிராத்தனையை ஆறுபடை வீடுகளில்... முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தான் செய்துள்ளனர்.  ஜெயமணி, முருகவேல், கோல்டன் சரவணன் ஆகியோர் தான் 'தர்பார்' படத்தின் வெற்றிக்கு இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார்.

rajini fans following devotional methods for darbar success

இதுகுறித்த, சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரஜினி ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ள 'தர்பார்' படம் இந்தியாவில் மட்டும் 4000 திரையரங்கங்களில் வெளியாக உள்ளதாகவும், உலகம் முழுவதும் மொத்தம் 7000 திரையரங்கங்களில் வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios