தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதேபோல், திரையுலகினரும் தீபாவளியை தங்களது குடும்பத்தினர் சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுகிழமையன்று மருத்துவ பரிசோதனைகக்காக தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் அமெரிக்கா சென்ற ரஜினி, தீபாவளியை அமெரிக்காவிலேயே கொண்டாடுவார் என்று கூறப்பட்டது.

ஆனால், நேற்று சென்னை வந்த ரஜினிகாந்த் தீபாவளி பண்டிகையை தனது மருமகன் தனுஷ், மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் பேரன் பேத்திகள் என அனைவருடனும் சந்தோஷமாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.