ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரை சினிப்ரியா காம்ப்ளக்ஸுக்குள் புகுந்த அ.தி.மு.க.வினர் ‘சர்கார்’ திரையிடலை இன்று மதியம் நிறுத்தினர். படம் பொதுமக்கள் மத்தியில் வன்முறையைத்தூண்டுவதால் மதுரையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் இதே போன்று போராட்டம் நடத்தப்பட்டு படம் நிறுத்தப்படும் என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காட்சிகள் நிறுத்தப்படுவதை திரையரங்க மேலாளரை சந்தித்து உறுதி செய்தபின் நிருபர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா,’’ புரட்சித்தலைவி அம்மா அவர்களையும், அவரது இலவசத்திட்டங்களையும் எள்ளி நகையாடி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டுக் கொந்தளிப்பில் உள்ளோம். நாங்கள் இன்னும் படம் பார்க்கவில்லை.

 படத்தில் அம்மா தொடர்பான காட்சிகளையும் வசனங்களையும் உடனே நீக்காவிட்டால் இப்போது மதுரையில் நடந்தது போல் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தப்பட்டு படம் முடக்கப்படும். தமிழக அரசு கொடுத்த இலவசங்களை எரித்து மக்களிடம் வன்முறையைத் தூண்டும் இப்படத்தை மதுரையில் ஒரு தியேட்டரில் கூட அனுமதிக்கமாட்டோம். தக்க போலீஸ் பாதுகாப்புடன் அ.தி.மு.க. தொண்டர்கள் மதுரையில் மற்ற பகுதிகளில்’சர்கார்’ ஓடும் தியேட்டர்களுக்கு விரைந்துகொண்டிருக்கிறார்கள்’ என்றார்.