rajamouli revel the movie story for hindhi

பாகுபலி 2 திரைப்படம், தற்போது 1500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்திற்காக, இயக்குனர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினரை பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தம்முடைய முழு படத்தில் கருவையும் பொட்டிலேயே வெளிப்படுத்தியுள்ளார் ராஜமௌலி... இதை நீங்கள் கவனித்தீர்களா...?

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான ராணாவிற்கு சுட்டெரிக்கும் "சூரியன்" வடிவில் உள்ள பொட்டு வைக்கப்பட்டிருக்கும்.

இது பல்வாள் தேவன் " என்கிற கதாபாத்திரம் எப்போதும் சூரியன் போல், எரிந்து கொண்டே கோபமாக இருக்கும் ஒருவன் என்பதை விளக்கும் விதமாக இருக்கும்.

அதே போல அமரேந்திர பாகுபலிக்கு "நிலா" வடிவில், பொட்டு வைக்கப்பட்டிருக்கும்... இது அவர் எப்போதும் நிழல் மற்றும் குளுமையை தரும் நிலா போல் அன்பானவர். பொறுமையானவர் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும்.

மேலும் தந்தையை கொன்று, தாயை காப்பாற்ற வரும் மகேந்திர பாகுபலிக்கு "பாம்பு" வடிவில் பொட்டு வைக்கப்பட்டிருக்கும். இதற்கு பாம்பு பழிவாங்க வருவது போல் தன்னுடைய தந்தைக்காகவும், தாயிற்காகவும் வருகிறார் என்பது போல் உள்ளது.

இந்த பொட்டுகள் மூலமே படத்தில் முழு கதையும் வெளிபடுத்தியுள்ளார் இயக்குனர் ராஜமௌலி என்பது குறிப்பிடத்தக்கது.