ராஜமௌலியின் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் விறு விறுப்பாக தயாராகி வருகிறது. ரசிகர்கள் இரண்டாம் பாகத்தை பார்க்க ஆவலாக இருக்கின்றனர், காரணம் முதல் பாகத்தில் அவர் வைத்த ஒரு டுவிஸ்ட் தான்.

இந்த ரகசியம் இரண்டாம் பாகம் வந்தால் தான் தெரியும். 

இந்நிலையில் கோவாவில் நடந்த 47வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ராஜவர்தன் சிங் ரத்தோர்.

பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்ற ரகசியத்தை என்னிடம் கூறியதற்கு இயக்குனர் ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

மேலும் இந்த ரகசியத்தை ராஜமௌலி ஏன் என்னிடம் கூறினார் என்றால், அரசுக்கு எல்லாம் தெரியும் என்பது அவருக்கு தெரியும். மேலும் ரகசியத்தை அரசு சிறந்த முறையில் காக்கும் என்பதும் அவருக்கு தெரியும் என்று, விஜயகாந்த் பாணியில் பதில் கொடுத்துள்ளார்.