இந்தியாவின் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள  படமான 'பாகுபலி 2' படத்தின் ரிலீஸ் தேதியை உலகில் உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது நடைபெறவுள்ளது

இந்த இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. 

மேலும் இந்த விழாவிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதத்தில் இந்த விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகிய இருவரையும் அழைக்க ஏற்பாடுசெய்துள்ளார்களாம் படக்குழுவினர்.

'பாகுபலி 2' இசை விழாவில் ரஜினி, விஜய் கலந்து கொள்வது இன்றுவரை உறுதி செய்யப்படவில்லை எனினும் ராஜமௌலி  மீது இருவருக்கும் மிகுந்த மரியாதை உள்ளதால் இந்த விழாவில் கலந்து கொள்ள இருவரும் ஒப்புக்கொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திரையுலகத்தை சேர்த்த பலர் கண்டிப்பாக ரஜினி மற்றும் விஜய் இதில் கலந்து கொள்வார்கள் என்றும், பல கோலிவுட் பிரபலங்களுக்கு பாகுபலி படக்குழுவினர்  சைலண்டாக அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.