Rajamouli - Mahesh Babu is a film in the coalition

ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகவுள்ள படம் அடுத்தாண்டு தொடங்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இயக்குனர் ராஜமௌலி கடைசியாக இயக்கிய பிரமமாண்ட படம் ‘பாகுபலி2’. இந்தப் படத்திற்குப் பின் தனது அடுத்தப் படத்தை அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தார் ராஜமௌலி.

இந்த நிலையில் ராஜமௌலி அடுத்து இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்க இருக்கிறார் என்றும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது.

இந்த தகவலை தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் மகேஷ் பாபுவே உறுதிப்படுத்தி உள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவான ‘ஸ்பைடர்’ நாளை வெளியாகவுள்ளது.

‘ஸ்பைடர்’ படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு, கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘பாரத் அனே நானு’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் தற்போது மகேஷ்பாபு பிஸியாக இருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்திலும் மகேஷ் பாபு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த ஆண்டு இறுதியில் ராஜமௌலி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

இந்தப் படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள்.