கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பாகுபலி', இப் படத்தை இயக்கிய பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகதின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் ஒன்றில் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த படம் எப்படி இருக்கும் என வருடம் கேள்வி எழுப்ப பட்டது.

இந்த கேள்விக்கு அவருடைய பாணியில் மிக சுவாரஸ்யமாக பாட் பதில் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஒரே ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவு.

எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், அந்த படம் ரிலீஸ் ஆனவுடன் முதல் பத்து நாட்களுக்கு அவர் பேசும் வசனங்கள் யார் காதிலும் விழக்கூடாது.

 அந்த அளவுக்கு கைதட்டல் சத்தமும், விசில் சத்தமும் கேட்க வேண்டும். அப்படி ஒரு படம் இயக்குவேன்' என்று பிரம்மாண்டமாக பதில் கூறியுள்ளர்.