மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்..இறக்கும் தருவாயில் தனது ஆழ்மனதின் மூலம் இளைய ராஜாவின் பாடலை முணுமுணுத்து தனது உயிரை மீட்டுக்கொண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது..  

அப்போலோ மருத்துவமனையில் செல்வி என்கிற பெண் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக சேர்க்கப்படுள்ளார்..அவருக்கு மருத்துவக்குழு புற்றுநோயை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்..அப்போது திடீரென அந்த பெண்ணுக்கு மிஸ்சுவிடும் திறன், ரத்த அழுத்தம் குறைவு ஏற்பட்டுள்ளது..இதனால் மருத்துவக்குழு என்ன செய்வதென்று தெரியாமல் திணறி உள்ளனர்..அதாவது அவரை காப்பாற்ற இயலாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது..

அப்போது திடீரென உயிர் காக்க இயலாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.. அந்த நிமிடத்தில் திடீரென ஒரு மிராக்கள் நிகழ்ந்துள்ளது..அந்த பெண் தனது ஆழ்மனதில் இருந்து இளையராஜா பாடலை கம்மிங் செய்துள்ளார்..ஏற்கனவே நன்கு படும் திறன் கொண்ட அந்த பெண்ணின் இந்த செயலால்..அவரது உடல்நிலை சீராக துவங்கியுள்ளது..இதை கண்ட மருத்துவர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளார்..

பின்னர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவ குழு.. செல்வியின் உடல்நிலையை விரைவில் தேற்றுவதற்காக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர்...அதாவது விரைவில் குணமடைய இளையராஜாவை சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கியுள்ளனர்..அதன்படி இளையராஜாவை வீட்டில் சந்திக்க செல்வியை அப்போல்லோ மருத்துவக்குழு அழைத்து சென்றுள்ளது.. 

இது குறித்து அப்போல்லோ மருத்துவக்குழு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.. இந்த பதிவை இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவும் ஷேர் செய்துள்ளார்.. முன்னதாக கல்லூரி ஒன்றில் பேசிய இளையராஜா எனது பாட்டால் தான் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என கூறியதை ஊடகங்கள் பலவும் விமரிசித்திருந்தன.. இதனை சுட்டி காட்டும் விதமாக கார்த்திக் ராஜா இந்த பதிவை மாரு பகிர்வு செய்து உண்மையில் இளையராஜாவின் பாடல் உயிர் பிழைக்க வைக்கும் என சுட்டி காட்டியுள்ளார்..

இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த புதுமைகளையும், இனிவரும் காலங்களில் இந்த பாரதம் நம்பர் ஒன் தேசமாக இருக்கும் என்பதையும் உள்ளடக்கிய பாடலை இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 

இளையராஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காதல், சோகம், வேதனை, துக்கம் போன்ற பலரது கவலைகளை மறக்க வைப்பது ராஜாவின் இசை தான். அதே போல், பலரது இரவு நேர தாலாட்டும் ராஜாவின் இசை என்றே கூறலாம். 

இவரது இசைக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் ராஜ்ஜியம் நடத்தி வரும் இளையராஜா, தற்போது தமிழில் மாயோன் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். 78 வயதிலும் ஓயாது உழைத்து வருகிறார் இளையராஜா. அவரது இசைக்கு தற்போது மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

அதன்படி உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட்டை தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவர்கள் குழுவினர், இந்த ஆண்டும் அதே பாணியில் ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளனர். 

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்ப இந்த மாணவர்கள் குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..