Raja reply Udayanidhi Stalin comments ippadai vellum film promotion

மெர்சல் திரைப்படத்தை அடுத்து இப்படை வெல்லும் படத்திற்கு புரோமஷன் கொடுக்க தமிழிசை மற்றும் ஹெச் ராஜாவுக்கு உதயநிதி அழைப்பு விடுத்ததையடுத்து, ஹெச். ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் ஜிஎஸ்டி வசனத்திற்கு பாஜகவினர், அதிலும் குறிப்பாக தமிழிசை, எச். ராஜா கண்டனம் தெரிவித்ததையடுத்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களை பார்க்கச்செய்தது. இதனால் படம் தாறு மாறாக கலெக்ஷனை அள்ளியது.

இந்நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 8ம் தேதி வெளிவரவிருக்கும் இப்படை வெல்லும் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், மெர்சல் திரைப்படத்தைப் போல் பாஜக தலைவர்கள் இப்படை வெல்லும் திரைப்படம் குறித்து கருத்து கூற வேண்டும் என்றும் அப்போதுதான் இந்தப் படமும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

விஜய் நடித்த மெர்சல் படத்துக்கு முழு புரோமஷன் செய்தது பாஜக. அது போல், இப்படை வெல்லும் திரைப்படத்துக்கும் எச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம் என்று நினைக்கிறேன் என்று உதயநிதி கூறியிருந்தார்.

இப்படை வெல்லும் திரைப்படத்தை பற்றி பாஜக பேசினால் படம் வெற்றி பெறும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், எச். ராஜா உதயநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஹெச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், உதயநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரின் பதிவில், "ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்" என அவர் தெரிவித்துள்ளார்.