பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புது போட்டியாளராக களமிறங்கி உள்ளவர்களில்  நடிகை சுஜா வருணியும் ஒருவர். இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களில்    கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார். 

இந்நிலையில் இவரை பார்த்து காமெடி நடிகர் வையாபுரி, "கட்டி பிடி கட்டி பிடி" என்கிற பாடலை பாடியுள்ளதாக தெரிகிறது. இதை வைத்து ஏற்கனவே ஒரு பிரச்சனையே செய்து விட்டார் சுஜா. ஆனால் பலர் சுஜா சொல்லுவது பொய் என்றும் வையாபுரி இப்படி பாடி  இருக்க வாய்ப்பில்லை என்று கூறி வந்தனர்.

தற்போது இது குறித்து பேசிய ரைசா,  ஆரவ் மற்றும் காஜலிடம் தன்னுடைய மனதில் உள்ள கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். அப்போது முன்பு  ஒரு முறை வையாபுரி பேசும்போது "நான் ஓவியாவை பிக் அப் செய்ய நினைத்தேன் அதற்குள் அவர் ஆராவுக்கு பிக் அப் ஆகி விட்டார்" என கூறினார். இதனை கேட்டதும் தனக்கு மிகவும் ஷாக்காக இருந்தது என்றும், ஓவியாவின் வயது என்ன இவருடைய வயது என்ன? என கூறி வையாபுரியை கேவலப்படுத்தினார்.

இதற்கு ஆரவ் அவர் விளையாட்டிற்காக அப்படி பேசி இருக்கலாம் என்கிறார். உடனே ரைசா பிந்துவிடம் நான் 86 களில் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் என வயதுக்கு ஏற்றாப்போல் பேசாமல், வேறு விதமாகத்தான் பேசினார். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, கண்டிப்பாக சுஜாவை பார்த்து வையாபுரி பாடல் பாடி இருப்பார் என்று தான் தனக்கு தோன்றுகிறது என்று கூறினார்.