பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சற்றும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் இத்தனைநாள் "யா..யா..யா..." "ட்ரு..ட்ரு..ட்ரு.." என சொல்லிக்கொண்டிருந்த ரைசா சினேகனுக்கு செம ரெய்டு விட்டுள்ளது.

இன்றைய ப்ரோமோவில் கவிஞர் சினேகன் பாசமாக பேசிக்கொண்டிருக்கும்போது வழக்கம்போல வா... போ... டா... போட்டு பேசி இருப்பார் என தெரிகிறது. இதனை கேட்ட ரைசா. இனி என்னை இந்த வா.. போ.. இதுபோன்ற சொல்லாதீங்க எனக்கு அது பிடிக்காது என மூஞ்சில் அடித்தபோல் பேசினார்.

இதற்கு சினேகன் நான் சாதாரணமாகத்தான் பேசினேன் என கூற... இது சொல்லும்போது செல்லமாக தெரியலாம் ஆனால் எனக்கு அது பிடிக்காது என செம ரெய்டு விட்டார். 

இந்த விஷயத்தை வெளியில் வந்து வையாபுரியிடம் சினேகன் கூற அதற்கு அவர் இத்தனைநாள் யாரையெல்லாம் நல்லவர்கள் என நினைத்தோமோ அவர்கள் அப்படியே மாறுகிறார்கள் தப்பா கணிச்சிருக்கோம் என்பது போல் சினேகனுக்கு ஆறுதல் சொன்னார்.