விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி' . இந்த படத்தில், விஜய் தேவரகொண்டாவின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தவர், ராகுல் ராமகிருஷ்ணா. 

இந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்திற்கு பின் பல படங்களில் வரிசையாக கமிட் ஆகி நடித்து வருகிறார். 'கேங்ஸ்டார்' என்கிற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

நடிகர் என்பதையும் தாண்டி, தெலுங்கில் பாடகராகவும், பாடலாரிசியராகவும், செய்தியாளராகவும் அறியப்பட்டவர். அவ்வபோது தன்னுடைய மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளிப்படுத்தியுள்ள விஷயம் ரசிகர்களையே அதிர வைத்துள்ளது. " சிறுவனாக தான் இருந்தபோது கற்பழிக்கப்பட்டதாகவும், இது குறித்து வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை என பதிவிட்டு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துயரத்தை தெரியப்படுத்தியுள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்து பலர், ஆண் குழந்தைகளும் பாதுகாப்போடு வளர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்கள்.