நடிகர் ராகவா லாரன்ஸ்  முனி, காஞ்சனா, காஞ்சனா 2 , என ஒரே படத்தை பல பாகங்களாக இயக்கி வெற்றியை கொடுத்தார். 

இந்நிலையில் கடந்த வாரம் காஞ்சனா  படத்தின் மூன்றாவது பாகம் "காஞ்சனா 3 ' வெளியாகியது. இதில், அரைத்த மாவையே மீண்டும் லாரன்ஸ் அரைத்துள்ளார், படம் ஏற்கனவே வெளிவந்த பாகத்தை சார்ந்தே உள்ளது. புதிதாக ஒன்றும் இல்லை என பல ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

மேலும், காஞ்சனா 3 -யை தொடர்ந்து நான்காவது பாகமும் வெளியாகும் என இந்த படத்தின் முடிவில் கார்டு ஒன்று இடம்பெற்றது. இதற்கு பலர் வேண்டவே வேண்டாம் என சமூக வலைத்தளத்தில் கூறி வந்தனர். 

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் லாரன்ஸ் அடுத்ததாக 'காலபைரவா' என்கிற பெயரில் இயக்கும் படத்தில், பேய்யை வைத்து இயக்குவதற்கு பதிலாக பாம்பை மையமாக வைத்து இயக்க உள்ளாராம். ஏற்கனவே பாம்பை மையப்படுத்தி, நீயா 2 விரைவில் வெளியாக உள்ள நிலையில், லாரன்ஸ் கவனமும் பாம்பு மீது திரும்பியுள்ளது.