பிரபல நடன இயக்குனரும், நடிகரும்மான ராகவா லாரன்ஸ் இன்று தன்னுடைய தாயாருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

சுவாமி தரிசனத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் எனவும்.  மாணவி அனிதாவின் நிலை மற்ற மாணவ மாணவிகளுக்கு ஏற்பட கூடாது என ஆவேசமாக கூறினார். 

மேலும் தற்போது ராகவா லாரன்ஸ், முனி படத்தின் நான்காவது பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால், இதன் காரணமாக திருப்பதிக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.