பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பட்டி, தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பிய படம் சந்திரமுகி. ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேல், நாசர் உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். ரஜினியின் சினிமா கேரியரில் தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் சந்திரமுகிக்கு எப்போதுமே தவிர்க்க முடியாத ஒரு இடம் உண்டு. 

இந்நிலையில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து பி.வாசுவுடன் ரஜினி கூட்டணி அமைக்க உள்ளதாகவும், சந்திரமுகி 2 படத்திற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சந்திரமுகி 2 படத்தை உருவாக்குவதற்கான வேலைகள் நடந்துவருவதாகவும் கூறப்பட்டன. 

இதுவரை வதந்தியாக உலவி வந்த இந்த விஷயத்திற்கு சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் முற்றுப்புள்ளிவைத்துள்ளார். ஆம், சந்திரமுகி 2 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து தான் நடிக்க உள்ளதாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தை பி.வாசு இயக்க உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற ராகவா லாரன்ஸின் கனவு சந்திரமுகி 2 மூலம் நிறைவேறியுள்ளது. இதே குஷியில் கொரோனா நிவாரண நிதியாக 3 கோடி ரூபாயை வாரி வழங்கியுள்ளார். ஓவர் குஷியில் குருவையே மிஞ்சிய சிஷ்யனாக, பிரதமரின் PM Cares நிதிக்கு, பெப்சிக்கு  ரூ.50 லட்சம்,  நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ. 50 லட்சம், மாற்று திறனாளிகளுக்கு உதவ ரூ. 25 லட்சம்,  ராயபுரத்தில் உள்ள தினக்கூலி தொழிலாளாளர்களுக்கு ரூ.75 லட்சம் என  வாரி வழங்கியுள்ளார்.