Asianet News TamilAsianet News Tamil

நிஜ செங்கேணிக்கு சொந்த செலவில் கான்கிரீட் வீடு..! வள்ளல் ராகவா லாரன்ஸ் செம்ம மாஸ் அறிவிப்பு..!

நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்து, சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'ஜெய் பீம்' படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ். நிஜ செங்கேணியான (பார்வதி அம்மாவுக்கு) தன்னுடைய சொந்த செலவில் கான்கிரீட் வீடு கட்டித்தர உள்ளதாக அறிவித்துள்ளார்.

 

Raghava lawrence announce A house for jai bhim rajakannu family
Author
Chennai, First Published Nov 8, 2021, 1:05 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்து, சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'ஜெய் பீம்' படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ். நிஜ செங்கேணியான (பார்வதி அம்மாவுக்கு) தன்னுடைய சொந்த செலவில் கான்கிரீட் வீடு கட்டித்தர உள்ளதாக அறிவித்துள்ளார்.

உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் எடுக்கப்பட்ட 'ஜெய் பீம்' திரைப்படமும், வெளியானது முதலே தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யா நடித்துள்ளது மட்டும் இன்றி, தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் இணைந்து  2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்தும் உள்ளார்.

Raghava lawrence announce A house for jai bhim rajakannu family

மேலும் இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், மணிகண்டன், லிஜோமோல், ரஜிஷா விஜயன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் தா.செ.ஞானவேல் திரைக்கதை எழுதி இயக்கி இருந்தார்.

இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் அத்துமீறலை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. இதில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு (பார்வதி அம்மாவுக்கு)  நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

Raghava lawrence announce A house for jai bhim rajakannu family

சமீபத்தில் நிஜ செங்கேணியான (பார்வதி அம்மாள்) திருட்டு பழி தங்கள் மீது போடப்பட்டு, எப்படியெல்லாம் கொடுமை படுத்த பட்டோம் என கூறியது கேட்பவர்கள் கண்களையே கலங்க வைக்கும் விதமாக இருந்தது. தன்னுடைய கணவரை போலீசார் சாகடித்தது மட்டும் இன்றி, அவர் தப்பி ஓடி விட்டதாக நாடக மாடியது என வாழ்க்கையில் நடந்த துயரங்களை கூறி இருந்தார். கடைசியாக  தன் கணவருடைய வாயில்நான் நான் சோறு ஊட்டும் போது ஒட்டியிருந்த ஒரு பருக்கை சோற்றை வைத்துதான், அந்த ஃபோட்டோவை பார்த்து அது அவர்தான் என்பதை 1 வருடம் கழித்து கண்டுபிடித்தோம் என்று அவர் கூறியது கொடுமையின் உச்சம்.

Raghava lawrence announce A house for jai bhim rajakannu family

இப்படி பல துன்பங்களுக்கு ஆளாகி, தன்னுடைய கணவரின் மரணத்திற்கு சட்ட பூர்வமாக நீதி கண்ட நிஜ செங்கேணி, தற்போது வரை ஒரு ஓலை குடிசையில் தான் வாழ்ந்து வருகிறார். தட்டுக்கூடை பின்னி தன்னுடைய பிழைப்பை ஓட்டி வரும் இவருக்கு தன்னுடைய சொந்த செலவில், வீடு கட்டி தர உள்ளதாக அறிவித்து மாஸ் காட்டியுள்ளார் பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ்.

போலீசாரால் கொடுமைப்படுத்தப்பட்டு உயிரைவிட்ட ராஜா என்பவரின் வாழ்க்கையைப் பற்றியும் அவரது மரணத்திற்கான உண்மையை வெளிக்கொண்டுவரும் வெளிக்கொண்டுவர சட்டத்தின் மூலம் போராடிய இப்படம் ஒவ்வொருவரின் உணர்ச்சியையும் தூண்டும் விதத்தில்
இந்த படத்தில் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்த மணிகண்டனும் செங்கேணி கதாபாத்திரத்தில் லிஜோமோல்  நடித்து இருந்தனர்.

Raghava lawrence announce A house for jai bhim rajakannu family

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது... "செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ராசா கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கை நிலையை பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது.

ஜெ.பிஸ்மி அவர்களிடம் மேலும் விபரங்களை கேட்டு அறிந்ததும் கூடுதலாக துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்து இருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்திற்கு கொண்டு வந்த வலைதள குழுவினருக்கு நன்றி. 28  வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசு பொருளாகிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா அவர்களுக்கும், ஜோதிகா அவர்களுக்கும், இயக்குனர் தா.செ.ஞானவேல்  அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என ராகவா லாரன்ஸ் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios