சினிமாவில் கதாநாயகனாக நடிப்பவர்கள் பலர் நிஜத்திலும்அப்படி வாழ்வார்களா என்று பார்த்தால் அது சந்தேகம் தான். ஆனால் இவர்களில் இருந்து வித்தியாச பட்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடன இயக்குனராக திரையுலகினரால் அறிய பட்ட இவர், பல வருடங்கள் போராடி கதாநாயகனாகும் வாய்ப்பை பெற்றார், ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை ஆனால் தன்னுடைய விடா முயற்சியால் இன்று முன்னனி நாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்கள் தொடர் வெற்றி பெற்றது.

தனக்கு வந்த லாபத்தை, பல சிறந்த வேலைகளுக்காகவும் தற்போது செலவு செய்து வருகிறார் லாரன்ஸ். அதில் முக்கியமானது குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு இவர் உதவியதன் மூலம் இன்று பல்லாயிரம் குழந்தைகள் மறு வாழ்வு பெற்றுள்ளனர்.

இதையெல்லாம் விட இவர் செய்து வரும் ஒரு காரியம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அது அவருடைய அம்மாவிற்காக இவர் தற்போது கட்டிவரும் கோவில். ஏன் அம்மாவிற்கு கோவில் கட்டிவருகிறேன் என லாரன்ஸ் மனம் திறந்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில் எனக்கு சிறுவயதில் கைகால்கள் சரியாக இல்லை. வறுமையில் இருந்த போதும் என்னை தூக்கிக்கொண்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று என் அம்மா மருத்துவம் பார்த்தார் என்றும்.

பேருந்து கட்டணத்தை கூட குறைத்துக்கொண்டு தனக்கு பிடிக்கும் என்பதற்காக ரோஸ்மில்க் வாங்கித்தருவார்.

இதுபோன்று பல விஷயங்களில் தியாகம் செய்து என்னை வளர்த்தார் என் அம்மா அந்த நன்றிக்காகத்தான் அவருக்கு தற்போது கோவில் கட்டினேன். அவருக்கு விருப்பம் இல்லாதபோதும் மற்றவர்கள் இதைப்பற்றி பேசுவது என் தாயாருக்கு மகிழ்ச்சியை தரவேண்டும் என்று நினைத்தேன் என்றார்.

மேலும், இதை பார்த்தாவது பணத்தை செலுத்தி முதியோர் இல்லங்களில் பெற்றவர்களை விடும் பிள்ளைகள் திருந்தவேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இப்படி பட்ட செயல்கள் மூலமும், தமிழகத்தில் வீர விளையாட்டிற்கு தடை விதித்த போது மாணவர்களுடன் நின்று போராடி வெற்றி கண்டது என பல விஷயங்களில் இவர் ரீலில் மட்டும் ஹீரோ அல்ல ரியல்லிலும் ஹீரோ என நிரூபித்துள்ளார்.