சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான 'மூன்று முகம்’ படத்தை தற்போது 34 வருடங்கள் கழித்து ரீமேக் செய்யப்படவுள்ளது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருண், ஜான், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் கேரக்டர் யாராலும் மாறாக முடியாது.
தற்போது ரஜினி நடித்த இந்த படத்தில் மூன்று வேடங்களில் பிரபல நடிகர் மற்றும் நடன இயக்குனர்ரான ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவ செய்திகள் வெளிவந்துள்ளது.
ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
