Asianet News TamilAsianet News Tamil

'சந்திரகுமாரி' சீரியலில் இருந்து வெளியேறும் ராதிகா? இனி இவருக்கு பதில் யார் தெரியுமா?

பிரபல நடிகை ராதிகா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடித்து வந்த 'சந்திரகுமாரி' சீரியலில் இருந்து வெளியேற உள்ளதாக அவரே கூறியுள்ளது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
 

radhika leave the chandrakumari seriyal
Author
Chennai, First Published Apr 2, 2019, 3:27 PM IST

பிரபல நடிகை ராதிகா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடித்து வந்த 'சந்திரகுமாரி' சீரியலில் இருந்து வெளியேற உள்ளதாக அவரே கூறியுள்ளது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

80 களில் ரஜினி, கமல், விஜயகாந்த், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் ராதிகா. திருமணமான பின்பு, கதாநாயகி வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், வெயிட்டான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து சிறந்த குணச்சித்திர நடிகையாக வலம் வந்தார்.

radhika leave the chandrakumari seriyal

மேலும் சித்தி சீரியல் மூலம் கடந்த 1999 ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமான இவர், இடைவிடாது, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி என 20  வருடங்களாக சீரியலில் தொடந்து நடித்து வந்தார்.

இந்நிலையில், ஒரு சில காரணங்களால் தற்போது நடித்து வரும் 'சந்திரகுமாரி' சீரியலில் இருந்து விளங்குவதாகவும். இவருக்கு பதில் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். 

radhika leave the chandrakumari seriyal

நடிகை விஜியும், அழகி தொடருக்கு பின் இந்த சீரியலில் நடிக்க வருவது தனக்கு மகிழ்ச்சி என்றும், ராதிகாவிற்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து 20 வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வந்த நடிகை ராதிகா திடீர் என வெளியேறியுள்ளது, ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios