தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90 களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா. வாரிசு நடிகை என்கிற அடையாளத்தோடு இவர் திரையுலகில் கால் பதித்திருந்தாலும், இவருடைய கடுமையான உழைப்பால், சிறந்த நடிகை மற்றும் தொழிலதிபர் என பெயர் எடுத்துள்ளார்.

முன்னணி நடிகையாக இருக்கும் போதே... ரிச்சர்ட் ஹென்றி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இந்த திருமணம் ஒரு சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது. இரண்டாவது திருமணமும் விவாகரத்து முடிந்ததைத் தொடர்ந்து தன்னுடைய மகள் ரேயானுடன் தனியாக வசித்து வந்தார்.

பின் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். தற்போது ரேயான் உடன் சேர்த்து ராதிகாவிக்ரு ராகுல் என்கிற மகனும் உள்ளார்.
இந்நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் தங்களுடைய திருமண தினத்தன்று பேரனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இருந்தனர். இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் நடிகர் சரத்குமாரை மோசமாக கலாய்த்து ஒரு ட்விட் போட்டிருந்தார்.
இதை பார்த்து செம்ம கடுப்பான ராதிகாவின் மகள் ரேயான், அவருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளது "இது என்னுடைய உலகம். எங்களுடைய வாழ்க்கை. என்னுடைய தந்தை ஆசிர்வதிக்கப்பட்டவர் எனவே அவருக்கு அருமையான மனைவி, நான்கு குழந்தைகள், பேரன் என அவரை நேசிக்கும் ஒரு குடும்பம் அவருக்கு கிடைத்திருக்கிறது என கூறியுள்ளார்.
ஏற்கனவே ரேயான் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், எப்போதுமே சரத்குமார் தன்னை சொந்த மகள் போல தான் பார்க்கிறார். அவருடைய பாசத்தில் கூட பாரபச்சம் பார்த்தது இல்லை என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.