'கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பின் ராதிகா ஆப்தே... உலக மக்கள் அனைவராலும் அறியப்பட்ட நடிகையாக மாறிவிட்டார். இதற்கு முன் ராதிகா ஆப்தே பிரகாஷ் ராஜ் நடித்த 'தோனி' , கார்த்தி நடித்த 'அழகுராஜா'' ஆகியப்படங்களில் நடித்திருந்தாலும் இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது 'கபாலி' திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தைரியமான நடிகை:

திரையுலகில் உள்ள நடிகைகள் தங்களுக்கு வரும் பிரச்சனையில் இருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள தைரியமானவர்களாக இருக்க வேண்டும். அப்படி தைரியத்துடன் பிரச்சனையை எதிர்கொள்ளும் மிகச்சில நடிகைகளில் இவரும் ஒருவர். சமீபத்தில் கூட இவரிடம் வாலாட்டிய நடிகர் ஒருவரை இவர் கன்னத்தில் அறைந்த சாம்பவர் பரபரப்பை ஏற்படுத்தியது. 

குடும்ப வாழ்கை:

திருமணம் ஆன பிறகும், பாலிவுட் திரையுலகில் மிகவும் துணிச்சலான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து கதாநாயகியாக நடித்து வரும் இவர் தன்னுடைய கணவருடன் ஆன சந்திப்பு மிகவும் காஸ்ட்லி என மனம் திறந்து கூறியுள்ளார். 

மும்பை டூ லண்டன்:

ராதிகா ஆப்தே தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருவதால், மும்பையில் வசித்து வருகிறார். அவருடைய கணவர் தொழில் காரணமாக லண்டனில் வசித்து வருகிறார். 

படப்பிடிப்பு இல்லாத போது தன்னுடைய கணவரை சந்திக்க மாதத்திற்கு இரண்டு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு மூன்று முறை லண்டன் சென்று தன்னுடைய கணவரை சந்தித்து வருகிறார். 

இது குறித்து அவர் கூறுகையில்... நானும் என்னுடைய கணவர் இருவரும் மிக காஸ்ட்லியான நகரங்களில் வசிப்பதால் அதற்க்கான செலவும் அதிகம். இதனால் எங்களுடைய சந்திப்பு மிகவும் காஸ்ட்லி. அதே நேரத்தில் குடும்பம் தொழில் இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்றால் இதனை தவிர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.