இந்தியாவில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டது, ஆனால் இவர்களுக்கு ஆதரவாக கபாலி படத்தில் சூப்பர்ஸ்டார்க்கு நாயகியாக நடித்த நடிகை ராதிகா ஆப்தே ஆதரவு தெரிவிப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
காஷ்மீர் மனிதத்தில் பகரவாத தாக்குதல் சம்பவம் தொடர்வதற்கு எதிராக, இந்திய திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர்கள் இந்திய மொழி படங்களில் நடிக பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை விதித்தனர்.
இந்த முடிவிற்கு பாலிவுட் திரையுலகை சேர்த்த , சல்மானகான், கரண் ஜோகர், அனுராக் காஷ்யப் மற்றும் ஓம்புரி போன்ற பல நடிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ராதிகா ஆப்தேவிடம் பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை விதித்தது பற்றி உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பியதற்கு.
பதில் அளித்த நடிகை ராதிகா ஆப்தே, 'சுவிட்சர்லாந்த்' நாட்டை சேர்த்த வாட்ச் நிறுவனகள் இந்தியாவில் வந்து கடை திறக்கும் போது, பாகிஸ்தான் நடிகர்கள் இங்கு வந்து நடிக்க கூடாதா? அந்த நாட்டு நடிகர்களும் இங்கு வந்து நடிக்கட்டும் இது தன என் கருத்து என சொல்லி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
