radharavi reveel the ajth help

சினிமாத்துறையில் நடிகர் அஜித்தைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் பலரிடம் நல்ல நடிகன் என்று பெயர் வாங்கியதை விட நல்ல மனிதன் என்று பெயர் எடுத்துள்ளார். 

தற்போது இவர் யாருக்கும் தெரியாமல் மூடி மறைத்த விஷயம் ஒன்றை நடிகர் ராதாரவி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய்சங்கர் ஒரு கண் மருத்துவராக உள்ளார் என்பது பலருக்கும் தெரியும். இவரிடம்தான் பிரபலங்கள் பலர் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவரை ஒரு முறை ராதாரவி சந்தித்த போது, அவர் அஜித் அவருடைய மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து செல்லும் தகவலை தெரிவித்தார்.

ராதாரவி அது பற்றி அவரிடம் விசாரித்த போது, அஜித் தொடர்ந்து பல ஏழை எளியவர்கள் கண் சிகிச்சைக்காக பண உதவி செய்து வருவதாகவும். ஆனால் இதனை யாரிடமும் கூற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இது வரை 5000 பேர் கண் பார்வை பெற அஜித் உதவியுள்ளதாகவும் விஜய சங்கர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தத் தகவலை ராதாரவி வெளியிட்டு, நான் அஜித்தைப் பார்த்து பல நாட்கள் ஆகிறது. ஆனால் தற்போது அவரைப் பார்க்க வேண்டும் என தோன்றுகிறது. அவர் கர்ணன் போன்ற வள்ளல்களுக்கு இணையானவர் என புகழ்ந்துள்ளார்.

இதன் மூலம் பணம் இருப்பவன் பெரிய மனிதன் இல்லை; நல்ல மனமும் வேண்டும் என தொடர்ந்து நிரூபித்து வருகிறார் தல அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.