radhamohan brindhavanam movie

தமிழ் திரையுலகில் தற்போது ஒரு படத்திற்கு வரிவிலக்கு கிடைப்பது என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

அப்படியே தமிழக அரசில் 30 % வரிவிலக்கு கிடைத்தாலும், பல கட்ட போராட்டங்களை தாண்டி படம் ரிலீஸ் ஆன பிறகு தான் கிடைக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த "சரவணன் இருக்க பயமேன்" படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு மிக எளிதாக அதுவும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே கிடைத்தது. இது தமிழ் சினிமாவில் அதிசயமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும், இயக்குனர் ராதா மோகன் "உப்பு கருவாடு' படத்திற்கு பிறகு இயக்கியுள்ள 'பிருந்தாவனம்' படத்திற்கு எந்த வித தடையும் இன்றி, வரிவிலக்கு கிடைத்துள்ளது. இதனை பலரும் இரண்டாவது அதிசயமாகவே பார்க்கின்றனர்.

வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள இந்த படம், ராதாமோகனின் மற்றொரு தரம் வாய்ந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.