தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த அவர், தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். 

இதில், சங்கத்தமிழன் படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ராசி கன்னாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனையடுத்து, தெலுங்கில் அவர் நடித்துள்ள வெங்கி மாமா, வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், ராசி கன்னா ஒரு பேட்டியில் தான் டேட்டிங் சென்றது குறித்து பேசியுள்ளார். 

அதில், நான் 16 வயதில் ஒரு பையனுடன் டேட்டிங் சென்றேன். அந்த பையனின் வயதும் 16 தான்' என்று கூறியுள்ளார். ராசி கன்னாவின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும், என்னது 16 வயதிலேயே டேட்டிங்கா?... பிஞ்சிலேயே பழுத்திட்டீயேமா!... என்பது மாதிரியான கமெண்ட்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.