#PushpaReleaseMonth இந்த மாதம் திரைக்கு வரவுள்ள "புஷ்பா தி ரைஸ்" படம் குறித்த ஹேஸ் டேக்கை ரசிகர்கள் ட்வீட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. 

இரண்டு பாகமாக இப்படம் வெளியாகி உள்ளது. முதல் பாகம் வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது. இரண்டாம் பாகத்தை அடுத்தாண்டு வெளியிட உள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

 புஷ்பா படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 6-ந் தேதி புஷ்பா படத்தின் டிரெய்லர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த மாதம் திரைக்கு வரவுள்ள "புஷ்பா தி ரைஸ்" படம் குறித்த ஹேஸ் டேக்கை ரசிகர்கள் ட்வீட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.