பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் 'புஷ்பா' திரைப்படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்திற்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், இந்த படத்தில் வில்லன் நடிகர் ஃபகத் பாசில் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் 'புஷ்பா' திரைப்படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்திற்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், இந்த படத்தில் வில்லன் நடிகர் ஃபகத் பாசில் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் திரைப்படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல், மற்றும் மரம் கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார். 'புஷ்பா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்றைய தினம் இப்படத்தின் வில்லன் ஃபகத் பாசிலின் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இது வரை பார்த்திடாத அளவிற்கு மிரட்டல் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். பான்வர் சிங் ஷெகாவத் என்கிற பெயரில் ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில், மொட்டை தலையுடன் வந்து மிரட்டியுள்ளார். தற்போது இவரது இந்த புதிய தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மலையாள சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்தாலும், நடிகர் விஜய் சேதுபதி பாணியில்... மற்ற மொழி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை தீர்வு செய்து நடித்து திறமையை மெருகேற்றி வருகிறார் நடிப்பு ராட்சஷன் ஃபகத் பாசில்.