வெளியானது புனித் ராஜ்குமார் கடைசி பட பர்ஸ்ட் லுக்.. ராணுவ உடையில் ரசிகர்களை கண்கலங்க வைத்த அப்பு..

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் படத்திலிருந்து முதல் பார்வை குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்படுள்ளது..

Puneeth Rajkumar James movie first look

கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 29 அன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாமல், கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 46 வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தை யாராலும் ஜீரணிக்க முடியாமல் போனது. பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே புனீத் ராஜ்குமாரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Puneeth Rajkumar's last film James to get a solo release on his birthday

புனீத் ராஜ்குமார் உயிருடன் இருந்தபோது அவர் ஏழை, எளிய மக்களுக்கு செய்த உதவிகள், ஏழைக் குழந்தைகளின் கல்விகாக செய்த செலவு என அவரைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியானதால், அவர் மீது மரியாதையும் மக்கள் மத்தியில் அதிகரித்தது. பெங்களூரிவில் உள்ள அவருடைய நினைவிடத்தைக் காண அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் நாள்தோறும் வந்து பார்வையிட்டு மரியாதை செய்து வருகின்றனர். அவரை அங்கீகரிக்கும் வகையில் கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது புனீத் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசிப் படமான ஜேம்ஸை அவரது முதல் பிறந்தநாளான மார்ச் 17, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக படக்குழு அறிவித்தப்படி மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் படத்திலிருந்து முதல் பார்வை குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்படுள்ளது.. ராணுவ உடையில் புனித இருக்கும் இ தா முதல் பார்வையை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் மல்க படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

 

அதோடு மறைந்த நடிகரை கவுரவிக்கும் வகையில், கன்னட திரையுலகில் உள்ள பிரபலங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஜேம்ஸ் படத்தை தனியாக வெளியிட முடிவு செய்துள்ளனர். எனவே மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு புதிய கன்னட படங்கள் எதுவும் வெளியாகாது. அதாவது மார்ச் 17 முதல் மார்ச் 23 வரை ஜேம்ஸின் தனி வெளியீடு இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios