தீபிகா படுகோன் நடித்துள்ள 'சபாக்' படத்தை தடை செய்யக்கூறி பரபரப்பு வழக்கு வழக்கு!
இயக்குனர் மேக்னா குல்சர் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள திரைப்படம் 'சப்பாக்'. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் உண்மையான வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மேக்னா குல்சர் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள திரைப்படம் 'சப்பாக்'. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் உண்மையான வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர், மற்றும் ட்ரைலர் வெளியான போது, ரசிகர்கள் இந்த படத்திற்கு தங்களுடைய பேராதரவு தெரிவித்திருந்தனர். மேலும் லட்சுமி அகர்வால் கதாப்பாத்திரமாக மாறி நடிக்க, தீபிகா எடுத்த முயற்சிகளையும் வெகுவாக பாராட்டி இருந்தனர்.
நாளை வெளியாக உள்ள இந்த படத்திற்கு, தடை விதிக்க வேண்டும் என, ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலுக்காக வாதாடிய அவருடைய வழக்கறிஞர் அபர்ணா பாட் திடீர் என பரபரப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தொடர்ந்துள்ள வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது, லட்சுமி அகர்வாலின் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட போது வாதாடிய, தன்னுடைய கதாபாத்திரத்திற்கு படத்தில் எந்த அங்கீகாரமும் தரப்படவில்லை எனகூறி வழக்கு தொடர்ந்து, நாளை வெளியாக உள்ள 'சப்பாக்' படத்தை தடை செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.