Asianet News TamilAsianet News Tamil

பிக்பாஸ் கவினுக்கு ஆரம்பமே பிரச்சனையா? 'லிப்ட்' பட சர்ச்சைக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய கையேடு, அடுத்தடுத்து பல படங்களில் நடிகர் கவின் நடிப்பார் என ரசிகர்கள் நினைத்த நிலையில், 
தற்போது வரை இவர் நடித்த முதல் படமான 'லிப்ட்' படம் வெளியாமல் உள்ளது. 

Production company's explanation for 'Lift' movie controversy
Author
Chennai, First Published Sep 15, 2021, 2:13 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய கையேடு, அடுத்தடுத்து பல படங்களில் நடிகர் கவின் நடிப்பார் என ரசிகர்கள் நினைத்த நிலையில், 
தற்போது வரை இவர் நடித்த முதல் படமான 'லிப்ட்' படம் வெளியாமல் உள்ளது. மேலும் தயாரிப்பாளருக்கும் , இந்த படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய லிப்ரா நிறுவனத்திற்கும், ஏற்கனவே சில பிரச்சனைகள் தலை தூக்கிய நிலையில்,  இதுகுறித்து லிப்ரா புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தொடர்ந்து படம் குறித்த பிரச்சனை குறித்து அமைதி காத்து வந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது...

Production company's explanation for 'Lift' movie controversy

"ஈகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தமிழ் திரைப்படமான ’லிப்ட்’ என்ற திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மட்டும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் அவர்களின் லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் 2021ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ரவீந்தர் சந்திரசேகரன் நடந்து கொள்ளாததால் எங்களது ஈகா என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் இடையே செய்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்பட்டது.

Production company's explanation for 'Lift' movie controversy

இதனை அடுத்து ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நபரான திலீப்குமார் சென்னை காவல்துறை ஆணையரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரிடம் ’லிப்ட்’ தமிழ் திரைப்படத்திற்கு சம்பந்தமான எந்த ஒரு காப்புரிமையும் இல்லை. எனவே தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் அவர்களிடம் ’லிப்ட்’ தமிழ் திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்காக எந்த ஒரு நிறுவனமும் தொடர்பு கொள்ள வேண்டாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

லிப்ட் தமிழ் திரைப்படத்தின் அனைத்து அதிகாரபூர்வ செய்திகளும் ஈகா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தினால் மட்டுமே ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், ஊடகத்திற்கும் தெரிவிக்கப்படும். என குறிப்பிட்டுள்ளனர். முதல் படம் வெளியாகும் முன்பே கவின் படத்துக்கு இப்படியெல்லாம் பிரச்சனையா ரசிகர்களே பீல் செய்து வருகிறார்கள். விரைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து, திரையரங்கில் இப்படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios