Asianet News TamilAsianet News Tamil

கொரோனா தடுப்பு பணியில் சிறந்து விளங்கும் கேரளா..! ஆதாரத்தோடு ட்விட் போட்ட பிரபலம்!

சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமும், ஊரடங்கு உத்தரவை சரியான முறையில் கடைபிடித்ததன் மூலம், கொரோன வைரஸின் தாக்கத்தில் இருந்து, கேரளா மாநிலம் விரைவில், மீண்டு வருகிறது என பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட் போட்டுள்ளார். 
 
producer sr prabu tweet for kerala control corona virus
Author
Chennai, First Published Apr 15, 2020, 2:29 PM IST
சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமும், ஊரடங்கு உத்தரவை சரியான முறையில் கடைபிடித்ததன் மூலம், கொரோன வைரஸின் தாக்கத்தில் இருந்து, கேரளா மாநிலம் விரைவில், மீண்டு வருகிறது என பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட் போட்டுள்ளார். 

கொரோன வைரஸ் முதல் முதலில், கேரளா மாநிலத்தை சேர்ந்தவருக்கு தான் கண்டறியப்பட்டது. மெல்ல மெல்ல கொரோன வைரஸ் தாக்கம் முதலில் கேரளாவில் அதிகரிக்கவும் செய்தது. அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினார், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன். 

producer sr prabu tweet for kerala control corona virus
தற்போது அரசின் முயற்சி மற்றும், மக்களின் ஒத்துழைப்பாலும்... கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பெரும் அளவு குறைந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைந்து வருகிறார்கள்.

ஆனால் மிக குறைவான கொரோனாநோயாளிகளின் எண்ணிக்கையை கொண்டிருந்த, பல மாநிலங்களில் சரியாக கட்டுப்பாடுகளை பின் பற்றாததால், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

producer sr prabu tweet for kerala control corona virus

இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் ஒன்றை வெளியிட்டு, கொரோனா தடுப்பு பணியில் எந்த ஒரு மாநிலம் மற்றும் நாடுகளுடன் ஒப்பிடும் போது சிறந்த மீட்பு. கேரளாவின் சிறந்த பணிகளை மதிக்க வேண்டும் என்றும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என ட்விட் செய்துள்ளார்.

அந்த பதிவு இதோ...

Follow Us:
Download App:
  • android
  • ios