பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என கறாராக கூறுபவர்கள் மத்தியில், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியும், தன்னுடைய சம்பள பணத்தை கூட குறைத்து கொள்கிறேன் என, வெற்றி படத்திற்கு இசையமைத்து தந்த இளையராஜாவை பற்றி கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளரும், கதாசிரியருமான கலைஞானம்.

இவர் இளையராஜா குறித்து முதல்முறையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 1978 ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் எம்.பாஸ்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பைரவி.

இந்த படத்திற்கு  இளையராஜா இசையமைத்திருந்தார். தயாரிப்பாளர் கலைஞானம் இப்படத்தை கடன் பட்டு உடன் பட்டு எடுத்து முடித்தார். கையில் குறிப்பிட்ட தொகை இருக்கும் போது,  இசை சேர்ப்பு பணிக்காக இளையராஜாவிடம் கொடுத்தார்.

இளையராஜாவும் மிகவும் தீவிரமாக இரண்டு மூன்று நாட்கள் ரீ ரெகார்டிங் பணியில் இருந்தார்.  ஒரு நிலையில் தயாரிப்பாளர் கலைஞானம் கையில் பணம் இல்லை என்பதால் இசையை பணியை நிறுத்துமாறு மிகவும் கோபமாக இளையராஜாவிடம் கூறியுள்ளார்.

 உடனே இளையராஜா அவரை தனியாக அழைத்துச் சென்று மிகவும் மரியாதையுடன், அண்ணே இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் அனைத்து வேலைகளும் முடிந்து விடும்.  உங்களிடம் பணம் இல்லை என்றால், என்னுடைய சம்பளத்தில் கூட குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

 'பைரவி' படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இளையராஜாவின் இசையும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. 

பின் இளையராஜாவை சந்தித்து அவருடைய முழு சம்பள பணத்தையும் தயாரிப்பாளர் கொடுத்தபோது,  தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டு கொடுக்குமாறு கூறி இளையராஜா அவரை நெகிழ வைத்தார்.  இந்த தகவலை கலைஞானம் தற்போது தெரிவித்துள்ளார்.