தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஞானவேல்ராஜா. இவருடைய மனைவி நேஹா சிங்கம் 3 படத்தில் ஆடை வடிவமைப்பாளர்ராக இருந்தவர். இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் சில பதிவுகளை பதிவிட்டார். பின் அதனை நீக்கி விட்டு அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில்...

சில நடிகைகள் நன்றாக வாழ்ந்து வரும் குடும்பத்தை உடைப்பவர்கலாக, பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமாக நடந்துக்கொல்கின்றனர். இதை நான் பொதுவாக சொல்ல வில்லை என்றும் ஒரு சில நடிகைகளை மட்டுமே குறிப்பிட்டு சொல்வதாகவும் தெரிவித்துள்ளார். 

இப்படிபட்ட நடிகைகள் திருமணம் ஆன ஆண்களை குறி வைத்து, படுக்கையை கூட பகிர்ந்துக்கொள்ள துணிந்து விடுகின்றனர். அவர்கள் பற்றிய பட்டியலை தான் சேகரித்து வைத்துள்ளதாகவும், விரைவில் அதனை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இவருடைய இந்த கோவமான பதிவைப் பார்த்த பலர் உங்களுடைய கணவருக்கு அப்படி நடந்ததா என கேள்வி எழுப்பினர். பின் இந்த பதிவை நீக்கி விட்டார். 

பின் விளக்காமான ஒரு பதிவை பதிவிட்டார்... அதில் இது மிகவும் சென்சிட்டிவ்வான விஷயம், பொழுது போக்கு அல்ல, நான் பதிவிட்டது என்னுடைய பிரச்சனை அல்ல, எனக்கும் என்னுடைய கணவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. என்ன சுற்றி உள்ள பலருக்கும் நடக்கும் விஷயங்கள். சில மோசமான நடிகைகள் திருமணமானவர்களின் வாழ்க்கையில் கூட தொடர்ந்து விளையாடுகிறார்கள். 

இதுபோன்ற ஒரு பொது பிரச்சனை குறித்து பெண் வெளிப்படையாக பேசினால், கவனத்தை ஈர்க்க இப்படி பேசுவதாக கூறுவார்கள், கண்டிப்பாக நான் அதற்காக பேசவில்லை, பெண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து தான் பதிவிட்டுள்ளேன். இதை பதிவிடுவதால் எந்த பயனும் இல்லை என கூறி அந்த பதிவை நீக்குவதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய கணவரைப் பற்றிய கருத்துக்கள் தன்னை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இப்படி ஷோ காட்டும் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுவாதவும், சமூக வலைத்தளம் என்பது ஒரு சக்தி வாய்த்த ஒன்றாக இருக்கிறது, எனவே நல்ல வழியில் ஆதரவு கொடுங்கள் என தெரிவித்துள்ளார்.