producer council support strike

விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும், வாடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் குடும்பங்களை அரவணைக்கவும் மத்திய, மாநில அரசுகள் ஆதரவுகரம் நீட்டவேண்டும் என்று வலியுறுத்தி, வருகிற 25.04.2017-அன்று அனைத்து கட்சிகளின் சார்பாகவும், அறப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒட்டுமொத்த கலையுலகினர் சார்பாகவும் ஆதரவை தெரிவிப்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.