producer council election date announced
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஜூன் 10 ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையரும்,சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதியுமான கே.என்.பாஷா கூறியதாவது.
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்துவது தொடர்பாக, சங்க உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கடந்த 7 ம் தேதி அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜூன் 10 ம் தேதி தேர்தலை நடத்துவது எனவும் அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை நடத்துவது எனவும், தேர்தலை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் நடத்துவது எனவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
மேலும் 21 ம் தேதி முதல் 25 ம் தேதிக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். 28 ம் தேதி மாலை 4 மணிக்குள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்ற உறுப்பினர்கள் புகைப் படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மொத்தம் 1560 உறுப்பினர்கள் உள்ளனர்.
