அட்லீ - விஜய் கூட்டணியில் தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்த பிகில் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் செம்ம ஹிட்டடித்துள்ளது. ராயப்பன், மைக்கேல் என்ற இரட்டை வேடத்தில் மாஸ் காட்டியிருந்தார் விஜய். எப்போதும் விஜய் படம் என்றாலே அவரது ரசிகர்கள் மட்டும் அல்லாது, மற்றவர்களையும் திருப்திப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். பக்கா கமர்ஷியல் படமாக திரைக்கு வந்த பிகில் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து தூள் கிளப்பியுள்ளது. 

பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 300 கோடி வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடக்கோரி, தயாரிப்பாளர் அர்ச்சனாவை நாள்தோறும் விஜய் ரசிகர்கள் துளைத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன பிகில் திரைப்படம் இன்றுடன் 50வது நாளை கடந்துள்ளது. 

இதனை கொண்டாடும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா, இந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த தமிழ் படங்களில் விஜய்யின் பிகில் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். 

 

இந்த செய்தியால் ஓவர் குஷியான விஜய் ரசிகர்கள் பிகில் 50வது நாளை மேலும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து சோசியல் மீடியாவில் #Bigil50thDay என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தீபாவளிக்கு பிறகும் ஓங்கி ஒலிக்கும் பிகிலின் சத்தத்தை தளபதி ரசிகர்கள் வேற லெவலுக்கு கொண்டாடி மகிழ்கின்றனர்.