நடிகர் சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு எதிராக நேற்று நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோவிற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு 26 வருட நட்பையும் தூக்கி எறிந்துள்ளார் வரலட்சுமி

குழந்தை பருவத்தில் இருந்தே நண்பர்களான நடிகை வரலட்சுமியும் விஷாலும் மிக நெருங்கிய தோழர்கள். குடும்பப் பிரச்சனை எதுவாக இருந்தாலும் இவர்களுடைய நட்பில் விரிசல் வந்தது கிடையாது. 1993 ஆம் ஆண்டு விஷாலின் தந்தையான ஜானகி ஜிகே ரெட்டி தயாரிப்பில், நடிகர் சரத்குமார் நடித்து வெளிவந்த படம் ஐ லவ் இந்தியா.

இந்த படத்தை மிகப்பெரிய ஹிட் கொடுத்த "சூரியன்" திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பவித்ரன் இயக்கினார். சரத்குமார் ஹீரோவாக இந்த படத்தில் நடிக்க தொடங்கிய 1993 ஆம் ஆண்டு முதலே விஷாலும் வரலட்சுமியும் பள்ளிப்பருவ நண்பர்களாக அறிமுகமாகி இன்று சினிமா துறையில் கொடிகட்டி பறக்கின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் விவகாரம் தொடர்பாக சரத்குமாருக்கு எதிராக நடிகர் விஷால் பாண்டவர் அணி உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றிருந்தார். இருந்த போதிலும் அவர்களின் நட்பில் சின்ன ஒரு விரிசலும்  ஏற்படாதவாறு இந்த நாள் வரை காத்திருந்து வந்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நேற்று ராதாரவி மற்றும் சரத்குமாருக்கு எதிராக விஷால் வெளியிட்ட வீடியோவை பார்த்த வரலட்சுமி, விஷால் உடனான நட்புக்கு பெரிய பிரேக் அப் கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மனதால் பெரிதும் காயப்பட்டு தன் மனதில் வைத்து இருந்த கொஞ்ச நெஞ்ச மரியாதை கூட உன் மீது இல்லை என தூக்கி எறிந்துள்ளார். இதிலிருந்து 26 வருட நட்பு ஒரு முடிவுக்கு வரும் நிலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.