நடிகர் சூரியா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'NGK' படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த திரைப்படம், தற்போது நடைபெற்று வரும் தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் காரணமாக முடங்கியுள்ளது.

இந்நிலையில் சூர்யா இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளியானது. 

இந்தப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக 'புருவ அழகி என்று இளைஞர்களால் வர்ணிக்கப்படும் பிரியாவாரியரை நடிக்க வைக்க படக்குழுவினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

இந்த தகவல் குறித்து விளக்கமளித்துள்ள இயக்குனர் கே.வி.ஆனந்த், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க பிரியாவாரியரை நாங்கள் அணுகியதாக வெளியான தகவலில் துளியும் உண்மை இல்லை என்றும், இந்த படத்தில் தமிழ் திரையுலகின் டாப் நாயகி ஒருவரை தான் தேர்வு செய்ய உள்ளதாகவும் கண்டிப்பாக பிரியா வாரியார் நடிக்க வாய்ப்பு இல்லை என உறுதியாக கூறியுள்ளார்.

 

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.