பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவை சேர்ந்த பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்துள்ளார். பிரியங்கா சோப்ராவை விட இவர் 11 வயது சிறியவர்.

நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியங்கா இருவரும் ஒன்றாக இணைந்து கடந்த இரண்டு மாதங்களாக நியூயார்க்கில் வலம் வந்த இவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்ட பின் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பிரியங்கா சோப்ரா சல்மான் கானுடன் நடித்து வெளிவர இருந்த பாரத் படத்தில் இருந்து, விலகினார். இது குறித்து, பாரத் பட இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தி உள்ளார். அதில், “மிக முக்கியமான சந்தோஷமான நிகழ்விற்காக பிரியங்கா சோப்ரா பாரத் படத்தில் இருந்து விலகுகிறார் என்றும், அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டு உள்ளார்”

மேலும், தற்போது இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் இந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவின், திருமணம் நிச்சயதார்த்த மோதிரத்தில் விலை எத்தனை கோடி என்கிற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த மோதிரம் 2.1 கோடி என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை பிரியங்கா சோப்ரா மற்றும் அவருடைய குடும்பத்தினர் இதனை உறுதிபடுத்தவில்லை.