priyanka chopra plastic surgery issue

நடிகைகள் பலர் தங்களுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளவும், மேலும் தங்களுடைய அழகை மெருகேற்றி கொள்ளவும் பிளாஸ்டிக் சர்ஜெரியை நாடி வருகின்றனர்.

ஆனால் பிற்காலத்தில் இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் பெரிதாக கண்டுகொள்வது இல்லை. ஏற்கனவே பல நடிகைகள் இதுபோன்ற பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டுள்ளார்.

சமீபத்தில் கூட நடிகை ஸ்ருதிஹாசன் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டதை வைத்து வலைத்தளங்களில் பலர் கிண்டலடித்து வந்தனர், இதற்கு ஸ்ருதிஹாசன் நான் என்னவேண்டுமானாலும் செய்வான் என பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் ஏற்கனவே தன்னுடைய உதடுகளில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டுள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது மூக்கிலும் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துள்ளார் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

முதல் முறையாக பிளாஸ்டிக் சர்ஜெரி செய்த மூக்குடன் பிரியங்கா ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார், இதை பார்த்து தான் தற்போது இவரை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.