தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.  'குவாண்டிகா' என்கிற தொடர் மூலம் ஹாலிவுட் படங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த வருடம் பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகரும், நடிகருமான நிக்ஜோனாஸ்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தற்போது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

எனினும் அடிக்கடி மும்பைக்கும் பறக்கிறார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா கர்ப்பமாக இருப்பதாக வலைத்தளங்களில் செய்தி பரவியது. அதனைப் பார்த்து ரசிகர்கள் முகநூல் மற்றும் ட்விட்டரில் தங்களுடைய வாழ்த்தை ப்ரியங்காவிற்கு தெரிவித்து வந்தனர்.

மேலும் பிரியங்கா சோப்ராவின் வயிறு பெரிதாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வெளியாகி இவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளது என சில கூறினர். இந்நிலையில் இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக, பிரியங்கா சோப்ராவின் தாய் மது சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் " பிரியங்கா சோப்ராவின் வயிறு பெரிதாக இருப்பதை வைத்து அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி உள்ளது. கேமராவை தவறான கோணத்தில் வைத்து படம் பிடித்ததால் அந்த தோற்றம் வந்துள்ளது. அவர் உண்மையில் கர்ப்பமாக இல்லை என்று கூறியுள்ளார்.