நடிகை பிரியங்கா சோப்ரா ஐநாவின் அமைதிக்கான நல்லெண்ண தூதராக இருந்தும், தொடர்ந்து இந்தியாவிற்கு மட்டுமே ஆதரவு தெரிவித்து வருவதாக, பாகிஸ்தான் அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 

உலக அழகி பட்டம் பெற்றவரும், நடிகையுமான பிரியங்கா சோப்ரா... தொடர்ந்து ஒரு சில சர்ச்சைகளில் சிக்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் இன்றி, தளபதி விஜய்யுடன், 'தமிழன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஐநாவின், அமைதிக்கான நல்லெண்ண தூதராகவும் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில், காஷ்மீரில் 370வது சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்தார். 

இதுதான், தற்போது புதிய பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது. ஐநாவின் அமைதிக்கான நல்லெண்ண தூதரகராக உள்ள பாலிவுட் நடிகை nபிரியங்கா சோப்ராவை நடுநிலையோடு செயல் படமால், இந்தியாவிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம்கொடுப்பதால், அவரை திரும்ப பெறுமாறு ஐநா சபைக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் எழுதியுள்ளது பிரியங்கா சோப்ராவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.