priyanka chopra feeling for acting in bad advertisement
நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர். தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் கால் பதித்து, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.
இவர் தமிழில் இளைய தளபதி விஜயுடன் 'தமிழன்' படத்தில் நடித்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் பல குவிந்தும், சில காரணங்களுக்காக தமிழ்ப் படங்களைத் தவிர்த்து விட்டார்.

இவர் ஆரம்ப காலத்தில் மாடலாக இருந்த போது அழகு சாதன கிரீம் விளம்பரத்தில் நடித்தார். இது குறித்து அண்மையில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில், நான் பிரபல அழகு சாதன கிரீம் விளம்பரத்தில் நடித்ததை நினைத்தால் அசிங்கமாக உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் இயற்கை இல்லாத, செயற்கை சேர்த்து உருவாக்கப்படும் அனைத்திலும் பக்க விளைவுகள் உண்டு என்பது போன்றும் பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
