priyamani mariage life issue

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியாமணி. இவர் தமிழில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் முஸ்தபா ராஜ் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முஸ்தபாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரியாமணி திருமணத்திற்கு முன்பே ஒரு சில நிபந்தனைகளை விதித்துத்தான் அவரை திருமணம் செய்து கொண்டாராம்.

அதில் முக்கியமானது திருமணத்திற்குப் பின்பும் நடிப்பேன் என்ற நிபந்தனை முக்கியமானது. இதனை முஸ்தப்பா முதலில் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் தற்போது, முஸ்தபாவின் பெற்றோர் பிரியாமணி 35 வயதைக் கடந்து விட்டதால் குடும்பத்தை கவனித்து குழந்தை பெற்றுக்கொள்ளும்படி கூறி வருகின்றனராம். ஆனால் பிரியாமணி இவர்களுடைய பேச்சை துளியும் மதிக்காமல் திருமணம் ஆன மூன்றாவது நாளே படப்பிடிப்புக்குச் சென்று விட்டாராம்.

இப்போது இந்தப் பிரச்னை பூதாகாரமாக வெடிக்கும் நிலையில் உள்ளது. பிரியாமணியின் செயல்கள் பெற்றோரை கவலைப்படுத்துவதால், பிரியாமணியை கண்டிக்கவும் முடியாமல், சப்போர்ட் செய்யவும் முடியாமல் திணறி வருகிறாராம் முஸ்தபா. ஆனால் பிரியா எந்தக் கவலையும் இன்றி தன்னுடைய படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகத் தெரிகிறது.